தேசியக் கொடி

இந்திய தேசிய சின்னங்கள் - தேசிய கொடி

 தேசியக் கொடி



கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவனணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது.காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும்,வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது. மூவர்ண கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 ல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிங்களி வெங்கைய்யா என்பவர் தேசிய கொடியை வடிவமைத்தார்.

Post a Comment

0 Comments